சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி |

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மதுபாலா நடிப்பில் வெற்றி பெற்ற படம் ‛ஜென்டில்மேன்'. கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக சில மாதங்களுக்கு முன் குஞ்சுமோன் அறிவித்தார். நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்ற புதுமுகம் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இயக்குனர் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளிவராமல் இருந்தது. தற்போது கோகுல் கிருஷ்ணா என்பவர் இதன் இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சில ஆண்டுகளுக்கு முன் நானி நடிப்பில் வெளியான ‛ஆஹா கல்யாணம்' என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.




