தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' |

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்'. இந்த படம் தமிழில் படம் ‛வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிற வருகிறது. மணி நாகராஜ் இயக்குகிறார். நான்கு விதமான கர்ப்பிணி பெண்களை சந்திக்கும் ஒரு மருத்துவரின் கதை இது. இந்த படத்தில் நீயா நானா கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார். இந்த படத்தை விஜய்யுன் உறவினரும், மாஸ்டர் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.