ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் | பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு |

‛ஜென்டில்மேன், காதலன் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், அடுத்ததாக ‛ஜென்டில்மேன்-2' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலை தளங்களிலும் இப்படத்தின் கதாநாயகி யார்..! நயன்தாராவா? என்று கேள்வி குறியுடன் சர்ச்சைகள் பரவலாக இருந்தது. தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹீரோயின் பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன். ரஜினி, மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் இப்படத்தில் நடிக்கிறார்.
இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். மேலும் படத்தின் இயக்குனர், ஹீரோ, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.