ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ் | புஷ்பா 2 படத்தில் பஹத் பாசிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் | கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யும் மாற்றம் | நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல் | மகளின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | அமரன் படத்தை பாராட்டிய ரஜினி | மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி | நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் - ஷாலினி விளக்கம். | இந்திய சினிமாவுக்கு 2024 சிறப்பான தீபாவளியா? | இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிவி பிரகாஷ்குமார் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட மொழி பேசப்படும் கர்நாடகாவில் இப்படத்தை கன்னடத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை விட தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கன்னடப் பதிப்பைப் பார்ப்பதற்கு இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் பதிப்பை பார்ப்பதற்கு மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள கன்னட ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரைக் கண்டித்தும், ராஜமவுலியைக் கண்டித்தும் டுவிட்டர் தளத்தில், “#BoycottRRRinKarnataka ” என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர்.