கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி |

தென்னிந்திய சினிமாவில் கடந்த வருடம் ஏற்பட்ட திருமணப் பிரிவுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரிவாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு இருந்தது. சில பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த சில வருடங்களிலேயே பிரிந்து போனார்கள்.
நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் சமந்தா. தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யாவை 'அன்பாலோ' செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும், நான்சைதன்யா சமந்தாவை தொடர்ந்து 'பாலோ' செய்து கொண்டு தான் இருக்கிறார்.
சமந்தா, நாகசைதன்யா பிரிவுக்குப் பிறகு இந்த ஆண்டு நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று தன்னுடைய டுவிட்டர் தளத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார் ஐஸ்வர்யா.
திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.