பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

கடந்த 2022ல் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 'காந்தாரா ; சாப்ட்டர் 1' என்கிற டைட்டிலுடன் தயாராகி வருகிறது. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த மலையாளத் திரையுலகை சேர்ந்த துணை நடிகரான கலாபவன் நிஜு என்பவர் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் காலமானார்.
துணை நடிகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவர் தங்கியிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்படவே உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர், சிகிச்சைக்கு முன்பாகவே உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் மிமிக்ரி கலைஞராக புகழ்பெற்றிருந்த இவர் சமீபகாலமாகத்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மாளிகைப்புரம், மார்கோ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தார், இந்த நிலையில் தான் 'காந்தாரா 2' படத்தில் நடிப்பதற்கு ஆடிசன் மூலமாக இவர் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பட்ட காலிலேயே படும் என்பது போல கடந்த மே மாதம் இதேபோல கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் ஒருவர் இந்த படத்தின் கலந்து கொண்டு நடித்தபோது, ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இப்படி அடுத்தடுத்து அதுவும் மலையாளத் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் 'காந்தாரா 2' படப்பிடிப்பில் மரணமடைந்து வருவது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.




