சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

கடந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவின் கவனத்தை திருப்பிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 கோடியில் தயாரான படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து, கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று ஏற்கெனவே படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். இதற்காக கர்நாடகாவின் காடுகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தி திரும்பினார்.
தற்போது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் தொடங்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார். உகாதி திருநாளையொட்டி ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “காந்தாரா படத்தின் எழுத்துப் பணிகள் தொடங்கியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம், “உகாதி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப்பணி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை உடனான உறவை வெளிப்படுத்தும் மற்றொரு வசீகரிக்கும் கதையை உங்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம். மேலும் பல அப்டேட்டுக்காக காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளது.
“தற்போது வெளியாகியிருப்பது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் தான். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்” என இரண்டாம் பாகம் குறித்து ஏற்கெனவே ரிஷப் ஷெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.