தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகர்களில் இப்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் பாலைய்யா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வரும் இவர், லாஜிக் முக்கியமில்லை ரசிகர்களுக்காக நான் நடத்தும் மேஜிக் தான் முக்கியம் என்று கூறி ரசிகர்களை திருத்திப்படுத்தும் விதமாகவே படங்களில நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது 66வது வயதில் அடி எடுத்து வைத்துள்ள பாலகிருஷ்ணா, ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வரவழைக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக்கை பாலகிருஷ்ணா வெட்டினார். வெட்டுவதற்கு முன்பாக தன் கையில் இருந்த கத்தியை ஸ்டைலாக மேலே சுழற்றி தூக்கி போட்டு பின் அதை பிடித்து கேக்கை வெட்டினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கேக்கை வெட்டுவதில் கூட பாலையாவின் ஸ்டைலே தனி என்று சிலாகிக்கிறார்கள்.