தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களில் பிரேமலு, ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்திய ஒரு திரைப்படம். சின்ன பட்ஜெட்டில், அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து, ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதையை அற்புதமாக கொடுத்திருந்தார் இயக்குனர் கிரிஷ் ஏடி. கதாநாயகியாக நடித்திருந்த மமிதா பைஜூ இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு இந்த படம் அவருக்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. தமிழகத்திலும் பிரேமலு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் அது பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான திலீஷ் போத்தன் பிரேமலு 2 படத்தின் தாமதம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சில காரணங்களால் பிரேமலு 2 படத்தின் வேலைகளை இப்போது துவங்க முடியவில்லை. அது மட்டுமல்ல எப்போது துவங்கும் என்றும் கூட உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் பிரேமலு படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏடி தனது அடுத்த படத்தை எங்களது தயாரிப்பிலேயே இயக்க உள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு தான் பிரமலு 2 படம் குறித்து யோசிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.