பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள திரையுலகில் தனது 74 வயதிலும் தற்போதும் ஹீரோவாக நடித்து வருபவர் மம்முட்டி. வருடத்திற்கு ஐந்து படங்களாவது அவரது நடிப்பில் வெளியாகிவிடும். அதற்கேற்றார் போல் சீரான இடைவெளியில் படங்களில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் மோகன்லால், மம்முட்டி, குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியில் மலையாளத்தில் உருவாகும் பேட்ரியாட் என்கிற படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான சில கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்த மம்முட்டி கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்வதை தவிர்த்து ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பேட்ரியாட் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் மம்முட்டி. அக்டோபர் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க இருக்கிறது. இதில் மம்முட்டி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் விதமாக திட்டமிடப்பட்டு இருந்த இந்த திரைப்படம் மம்முட்டியின் இந்த ஒய்வு காரணமாக ஏற்பட்ட இடைவெளியால் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.




