'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ‛ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. கேங்ஸ்டர் பின்னணியில் அதே சமயம் நகைச்சுவை கலந்த கதை அம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படத்தில் ‛ரங்கன்' என்கிற தாதா கதாபாத்திரத்தில் ஆக்சன் பிளஸ் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பஹத் பாசில், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இதற்கு முன்பாக இவர் ‛ரோமாஞ்சம்' என்கிற ஹாரர் காமெடி படத்தை இயக்கி வெற்றியைப் பெற்றவர். இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சஜின் கோபு.
குறிப்பாக ஆவேசம் படத்தில் தொங்கு மீசையுடன் பஹத் பாசிலின் வலது கையாகவே படம் முழுவதும் பயணிக்கும் ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். சமீபத்தில் கூட பஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகி உள்ள ‛பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆவேசம் படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லாலை வைத்து ஜித்து மாதவன் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்திலும் சஜின் கோபுவுக்கு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி அவரையும் படத்தில் இணைத்து கொண்டுள்ளாராம் இயக்குனர் ஜித்து மாதவன்.