சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

மலையாளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. ஹனீப் அதேனி இயக்கியிருந்தார். தன் அண்ணனை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் தம்பியின் கதை தான் இந்த படம். வன்முறை தூக்கலாகவே இருக்கும் விதமான ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. அதேசமயம் விறுவிறுப்பான திரைக்கதையும் வித்தியாசமான அதிரடியான சண்டைக் காட்சிகளும் இந்த படத்திற்கு வெற்றியை தேடி தந்துள்ளன.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் அதிகம் ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக மொத்த படக்குழுவையும் பாராட்டிய அல்லு அர்ஜுன், இயக்குனரிடம் படத்தை மிகுந்த தரத்துடன் தயாரித்தது குறித்தும் புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்ல படத்தின் வலுவான கதையையும் அது சொல்லப்பட்ட விதத்தையும் மேலும் கதாநாயகனாக நடித்திருந்த உன்னி முகுந்தனின் பிரமிக்க வைக்கும் நடிப்பையும் படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகளையும் மனதார பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.