அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகை ஹனிரோஸ், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சமூக வலைதளத்தில் ஹனிரோஸ் பற்றி ஆபாசமாக பதிவிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கும்பளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த நகை கடை அதிபர் பாபி செம்மனூர் மீதும் ஹனிரோஸ் புகார் அளித்தார். அவரது நகை கடை திறப்பு விழாவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தன்னை பழிவாங்க அவதூறு பரப்புவதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் பாபி செம்மன்னூர் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று வயநாட்டில் உள்ள விடுதியில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த தொழிலதிபர் பாபி செம்மன்னூரை போலீசார் விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் எர்ணாகுளம் ஜூடிசியல் கோர்ட்டில் நடிகை ஹனிரோஸ் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் பாபி செம்மன்னூரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பாபி செம்மன்னூர் கூறியிருப்பதாவது: எனது 2 நகைக்கடைகளின் திறப்பு விழா கண்ணூரில் நடைபெற்றது. இதில் நடிகை ஹனிரோஸ் கலந்துகொண்டு கடைகளை திறந்து வைத்தார். அவர் நகைகளை அணிந்து நடனமாடினார். அதுகுறித்து நான் ஆக்கப்பூர்வமாக சில கருத்துகளை பதிவிட்டேன். அது தவறாக இரட்டை அர்த்தத்தில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் நடிகைக்கு மன வருத்தம் ஏற்பட்டது. அதேபோல எனக்கும் மன வருத்தம் ஏற்பட்டு உள்ளது.
நான் வேண்டுமென்றே அப்படி பதிவிடவில்லை. சில நேரம் காமெடிக்காக சில கருத்துகளை இதுபோல பதிவிடுவது உண்டு. அது எனது தொழிலில் மார்க்கெட்டிங் நுட்பத்தின் ஒரு பாகமாகும். என்று கூறியுள்ளார்.