பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஹனிரோஸ். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தான் தொடர்ந்து சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அப்படி செய்பவர்களை பட்டியலெடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்திருந்த அவர், சொன்னபடியே இரு தினங்களுக்கு முன்பு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்திருந்தார். இதில் கிட்டத்தட்ட 25 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்ல வசதி படைத்த ஒரு நபர் தன்னை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறி அவர் மீதும் புகார் அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட அந்த நபரின் பெயரை அவர் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அந்த நபர் கேரளாவில் புகழ்பெற்ற செம்மனூர் ஜுவல்லரி நகை கடைக்கு சொந்தக்காரரான பாபி செம்மனூர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் அவரை தங்களது கஸ்டடியில் எடுத்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை குறித்து நடிகை ஹனிரோஸ் கூறும்போது, “என் மீதான சைபர் தாக்குதல் குறித்து எர்ணாகுளம் சென்றல் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு கொண்டுசெல்ல விரும்பினேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவரிடம் முழு விவரமும் கூறினேன். உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அங்கிருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்தது.
தற்போது அதன் பயனாக புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கே கேரளாவில் சிஸ்டம் சரியாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் மிகப்பெரிய நன்றி. இனி இதுபோன்று யார் மீதும் சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும் இல்லையா?” என்று கூறியுள்ளார்.




