தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் இனி சிறப்புக் காட்சிகளுக்கும், டிக்கெட் கட்டண உயர்வுக்கும் அனுமதி கிடையாது என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார்.
இதனிடையே, நாளை வெளியாக உள்ள ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு சிறப்புக் காட்சிகள், கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைக்குமா என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு காத்திருந்தார். அதனால், ஆந்திர மாநில முன்பதிவைக் கூட அவர் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று இரவு அவற்றிற்கான அனுமதியை தெலுங்கானா அரசு அறிவித்தது. ஆனால், நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதிகாலை 4 மணி காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வைப் பொறுத்தவரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 150 ரூபாயும், சிங்கிள் தியேட்டர்களில் 100 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது படம் வெளியாகும் முதல் நாளுக்கான கட்டணங்கள் மட்டுமே.
இரண்டாவது நாள் முதல் பத்து நாட்கள் வரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 100 ரூபாயும், சிங்கிள் தியேட்டர்களில் 50 ரூபாயும் மட்டுமே உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆந்திர மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 175 ரூபாயும், சிங்கிள் தியேட்டர்களுக்கு 135 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 வரையில் இந்த கட்டண உயர்வு தரப்பட்டுள்ளது. மேலும் நாளை அதிகாலை 1 மணி காட்சிக்கு கட்டணமாக 600 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 14 நாட்களுக்கு வழங்கப்பட்ட ஆந்திர அரசின் அனுமதியை 10 நாட்களுக்குக் குறைத்துள்ள ஆந்திர உயர்நீதி மன்றம். ஒருவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை விட தெலுங்கானாவில் குறைவான டிக்கெட் கட்டண உயர்வே இருப்பதால் நிறைய ரசிகர்கள் வந்து படத்தைப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.