புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழிகளிலும் மிகச் சிறப்பான வரவேற்பு பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கமல், நாகார்ஜுனா, மோகன்லால், கிச்சா சுதீப் என ஒவ்வொரு மொழியிலும் இருந்து திரையுலக ஜாம்பவான்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் இந்த நிகழ்ச்சிக்கென கூடுதல் பார்வையாளர்களும் கிடைத்துள்ளார்கள். அந்த வகையில் தமிழில் இந்த நிகழ்ச்சி துவங்கியபோது இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்த கமல்ஹாசன் தனது அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்து கடந்த ஏழு சீசன்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது எட்டாவது சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தனக்கான வேறு பணிகள் இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து விடைபெற்று ஒதுங்கினார் கமல். தற்போது நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதே போல கன்னடத்தில் கடந்த 2013ல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கிச்சா சுதீப். அவரும் இந்த சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெற்று கிளம்பும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சி 11வது சீசனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் உங்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் அன்பு கிடைத்தது. பத்து வருடங்களுக்கு மேலாக இப்படி ஒன்றாக பயணித்த எனக்கு தற்போது இதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இதுதான் நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும். என்னுடைய இந்த முடிவுக்கு கலர்ஸ் தொலைக்காட்சியும் இத்தனை வருடங்களாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் நீங்களும் மிகப்பெரிய மதிப்பு கொடுப்பீர்கள் என நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதனால் இந்த சீசனை மிகச் சிறப்பானதாக மாற்றுவோம். நானும் என்னால் முடிந்த வகையில் உங்களை பொழுதுபோக்க செய்வேன்” என்று கூறியுள்ளார்.