மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப் பல வருடங்களுக்கு முன்பே தென்னிந்திய அளவில் மட்டுமல்லது பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக மாறியவர். குறிப்பாக ராஜமவுலியின் 'நான் ஈ' திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு கிடைத்த புகழால் தற்போதுவரை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 10 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் சுதீப்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் சரோஜா சஞ்சீவ் காலமானார். தன் தாய் மீது மிகுந்த பாசம் கொண்ட கிச்சா சுதீப்புக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். தற்போது சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' என்கிற திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுதீப் தனது தாயார் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, “தினசரி என் அம்மாவிடம் ஏதாவது பேசி விடுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் அணியும் விதவிதமான உடைகளை அணிந்து கண்ணாடி முன் நின்று புகைப்படம் எடுத்து அதை என் அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன். அது அவ்வளவு ஆர்வமாக இருக்கும். அவரும் அதை பார்த்து விட்டு பாராட்டியோ கிண்டலாகவோ எதோ ஒன்று சொல்வார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு எனக்கு அப்படி விதவிதமான ஆடைகளை அணிவதே பிடிக்கவில்லை. அதன் பிறகு இரண்டு மூன்று எபிசோடுகளில் சாதாரணமான குர்தா மட்டுமே அணிந்தேன்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். என்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக அவர்களை ஏமாற்ற கூடாது என நினைத்து மீண்டும் பழையபடியே பிக்பாஸுக்கான உடைகளை அணியை துவங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் சுதீப்.