பிளாஷ்பேக்: முதல் புராண காமெடி படம் | ‛கல்கி 2898 ஏடி' - சாட்டிலைட் டிவி உரிமை விற்பனையில் தடுமாற்றம்? | 100 மில்லியனைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' பாடல் | பிக்பாஸில் தர்ஷிகா! பொன்னி சீரியலுக்கு குட்பை தானா? | வரலாற்றுப் படம் இயக்க தயாராகும் இயக்குனர் பிரேம்குமார் | கிராமி விருதுகளுக்காக அனுப்பப்பட்ட மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் | தேவரா இயக்குனரை ஒரு மாதத்திற்கு வெளியூருக்கு அனுப்பும் ஜூனியர் என்டிஆர் | 1400 கி.மீட்டரை 12 மணி நேரத்தில் கடந்த 'எம்புரான்' படக்குழு ; பிரித்விராஜ் பாராட்டு | மெய்யழகன் படத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் பி.சி ஸ்ரீராம் ; தயாரிப்பாளர் புது தகவல் | ‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது |
வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவரும் இயக்குனர் சிவாவின் தம்பியுமான பாலா தற்போது மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே அவரது திருமண விவாகரத்து சர்ச்சை குறித்து அவ்வப்போது பொதுவெளியில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2010ல் மலையாள பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அதன்பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கிறார். அவர் தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். நடிகர் பாலா இரண்டாவதாக எலிசபெத் என்கிற டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமணம் கூட அவரது மூன்றாவது திருமணம் தான் என்றும் பாலாவிற்கு 2008லேயே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது என்கிற தகவலையும் ஹிமா நிவேத் கிருஷ்ணா என்பவர் பாலாவின் திருமண சான்றிதழுஉடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் பாலாவை, தனது மகளின் எதிர்காலம் கருதாத அவரது சுயநலத்தை மிக நீண்ட பதிவு மூலம் கடுமையாக கண்டித்துள்ளதுடன் இந்த தகவல் பொய்யென்றால் தாராளமாக அவர் என் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, “என் தந்தை மீது அன்பு செலுத்துவதற்கு ஒரு சிறு காரணம் கூட என்னிடம் இல்லை. அவர் என் தாயை அடித்து துன்புறுத்துவதை நான் சிறுவயதிலேயே நேரில் பார்த்தவள். அதனால் இனி ஒருபோதும் என் வாழ்க்கையில் என் தந்தையின் குறுக்கீடு இருக்க விரும்பவில்லை” என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலுக்கு நடிகர் பாலாவும் இனிமேல் நான் உன் வாழ்க்கையும் வரவே மாட்டேன் இன்று எனக்கு வலி மிகுந்த நாள் என்று கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டார்.
இதில் பாலா வெளியிட்ட வீடியோவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருவதுடன் பாலாவின் மகள் வெளியிட்ட வீடியோவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து இப்படி மகளை வீடியோ வெளியிட செய்தது அவரது தாய் அம்ருதா சுரேஷ் தான் என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது ஹிமா என்பவர், “பாலா தனது மகளின் எதிர்காலம் என்னவாகும் என்று கூட யோசிக்காத ஒரு சுயநல மனிதர்.. அவரது கண்ணீர் பொய்” என்று கூறும் விதமாகவும் மேலும் அவர் தனது முதல் திருமணத்தை பற்றி எங்கேயும் வெளியே பேசாமல் மறைத்து வருவதை வெளிக்கொண்டுவரும் விதமாகவும் அது குறித்த சான்றிதழை வெளியிட்டுள்ளார். இவை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.