'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் துருவ சார்ஜா. கடந்த சில வருடங்களுக்கு முன் காலமான நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி இவர். அது மட்டுமல்ல நடிகர் அர்ஜுனின் உறவு முறையில் அவருக்கு மருமகனும் கூட. சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களை தமிழிலும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் துருவ சார்ஜாவின் பெர்சனல் ஜிம் பயிற்சியாளரை அவரது மேலாளர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையில் வெளியிட்டுள்ள தகவலில் துருவ சார்ஜாவின் மேலாளர் அஸ்வின் என்பவர் ஜிம் பயிற்சியாளர் பிரசாந்த் பூஜாரியை, தனக்கு கீழ் பணி புரியும் இரண்டு நபர்களை விட்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார். மே 29ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து தற்போது பிரசாந்த் பூஜாரி கொடுத்துள்ள புகாரின் பேரில் அஸ்வின் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் துருவ சார்ஜா உடன் ஜிம் பயிற்சியாளரான பிரசாந்த் பூஜாரி நெருக்கமான நட்பு காட்டுவதை விரும்பாததால் அஸ்வின் இப்படி தாக்குதலுக்கு ஏற்பாடு செய்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தனது உதவியாளர்களை ஏவி விட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.