ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ் | புஷ்பா 2 படத்தில் பஹத் பாசிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் | கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யும் மாற்றம் | நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல் | மகளின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | அமரன் படத்தை பாராட்டிய ரஜினி | மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி | நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் - ஷாலினி விளக்கம். | இந்திய சினிமாவுக்கு 2024 சிறப்பான தீபாவளியா? | இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிவி பிரகாஷ்குமார் |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ஒரு இசை அமைப்பாளராக திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது மோகன்லால் நடித்த 'யோதா' என்கிற படத்திற்குத்தான்.
இந்த நிகழ்வில் அது குறித்து நினைவு கூர்ந்த மோகன்லால், “30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஹ்மானின் இசையில் இங்கே பாடலை கேட்கிறேன். மலையாள திரையுலகில் மோகன்லாலின் தந்தை ஆர்.கே சேகரின் பங்களிப்பு ரொம்பவே அபரிமிதமானது. கிட்டத்தட்ட 500 படங்களில் (ஆர்கெஸ்ட்ரா) பணியாற்றியுள்ள அவர் அந்த சமயத்தில் 23 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் நான் நடித்த 'இருவர்' படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்ததும் அவருடன் ஆராட்டு படத்தில் இணைந்து நடித்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்” என்று கூறியுள்ளார்.