ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் |

ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களை முடித்த கையோடு நடிகர் பிரபாஸ் கொஞ்ச நாள் ஓய்வெடுக்க விரும்பி சினிமாவை விட்டு ஒதுங்கி வெளிநாடுகளில் தங்கியிருந்தார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார் பிரபாஸ்.
இத்தாலியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். சயின்ஸ் பிக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.