'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கடந்த சில வாரங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மலையாள படங்களின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியாகி கேரளாவை விட அதிக அளவில் வசூலித்து வருகிறது. இன்னொரு பக்கம் அதற்கு முன்பாக மலையாளத்தில் வெளியாகி நூறு கோடி வசூலை தாண்டிய பிரேமலு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மலையாளத்தில் பெற்ற அதே வரவேற்பை இங்கேயும் பெற்றுள்ளது.
இயக்குனர் ராஜமவுலியின் மகன் இயக்குனர் எஸ்.எஸ் கார்த்திகேயா இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்துள்ளார். தெலுங்கிலும் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து இதன் சக்சஸ் மீட்டை சமீபத்தில் நடத்தியுள்ளார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ராஜமவுலியும் அனில் ரவிபுடியும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, “பொதுவாக எனக்கு காதல் படங்கள் பிடிப்பதில்லை. நமக்கு எப்போதுமே ஆக்ஷன் தான். இருந்தாலும் இந்த படம் எப்படி இருக்கிறது என பார்ப்போம் என்று தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கிய 15வது நிமிடத்திலிருந்து சிரிக்க ஆரம்பித்தவன் படம் முடியும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன். இந்த படம் தியேட்டரில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் பொறாமையுடனும், வலியுடனும் சொல்கிறேன் மலையாள நடிகர்கள் மிகச் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ வரும் நாட்களில் இளைஞர்களின் 'க்ரஷ்' ஆக மாறப் போகிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயமாக 1989இல் கீதாஞ்சலி படத்தில் நடித்த கிரிஜா மற்றும் பிரேமம் நடிகை சாய் பல்லவி ஆகியோரை போல நினைவு கூறப்படும் என்று பாராட்டியுள்ளார். இந்த படம் வரும் வெள்ளியன்று தமிழகத்திலும் வெளியாக இருக்கிறது.