ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் செலெக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் மோகன்லாலுடன் அவர் இணைந்து நடித்திருந்த 'நேர்' திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க நீதிமன்ற விசாரணையை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் மோகன்லாலும் பிரியாமணியும் வழக்கறிஞர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு பிரியாமணி ஒரு வழக்கறிஞராக தனது தரப்பு ஆட்களை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளும் விசாரணை அவரை ஒரு வழக்கறிஞராகவே நம்மிடம் காட்டியது. அதிலும் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு இளைஞனை காப்பாற்ற போராடும் எதிர்மறை கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார் பிரியாமணி. படம் வெளியான முதல் நாளே வெற்றி என உறுதியாகி விட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரியாமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பூர்ணிமா கதாபாத்திரத்திற்காக என்னை நீங்கள் நினைத்து பார்த்ததற்கு நன்றி ஜீத்து ஜோசப் சார்.. என்னை அழகாக காட்டியதற்காக பூர்ணிமா இந்திரஜித்துக்கும் நன்றி. ஒரு வழக்கறிஞராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற நடிப்பையும் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுத்ததற்காக இணை இயக்குனர் சாந்தி மாயா தேவிக்கு நன்றி. என்னுடைய தந்தையாக நடித்த சித்திக்.. 'டாட்'..
அடுத்த கேசுக்கு தயாராவோமா? துரதிர்ஷ்டவசமாக மோகன்லால் சாருடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்த புகைப்படங்கள் எதுவும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இறுதியாக அனஸ்வரா ராஜன்.. யூ ராக் மை டியர்.. உன்னிடம் இன்னும் அதிக சக்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.