அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளியான படம் ஒப்பம். படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக மோகன்லால் நடித்திருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தை ஹைவான் என்கிற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்க, சமுத்திரக்கனி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “இந்தப்படம் ஒப்பம் படத்தை போல அப்படியே இருக்காது. ஹிந்திக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை செய்துள்ளேன். அதேசமயம் இதில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்திலும் அக்ஷய் குமார், மோகன்லால் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.