மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்கிய படம் லூசிபர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், இயக்குனர் பாசில், சச்சின் கெடேகர், கலாபவன் சாஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். தீபக் தேவ் இசை அமைக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராணுவ வாகனங்களின் பின்னணியில் ஆக்ஷன் போஸில் மோகன்லால் காணப்படுகிறார். முதல் பாகத்தில் அரசியல் காட் பாதரான லூசிபர்(மோன்லால்) தனது அடுத்த ஆபரேஷனுக்காக ரஷ்யாவில் சென்று இறங்குவதாக படம் முடிந்தது. இந்த பாகம் ரஷ்யாவில் தொடங்கி இந்தியா வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு மோகன்லால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.