எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
மலையாள திரையுலகை பொருத்தவரை சமீப காலமாக வியாபார எல்லையில் விரிவாக்கம் அடைந்துள்ளதுடன் வசூலிலும் மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளியான ‛2018' திரைப்படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் மலையாள படம் என்கிற பெயரை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆர்.டி.எஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் தான் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இத்தனைக்கும் இந்த படம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. முதல் நாளிலிருந்து வரவேற்பை பெற்ற இந்தப்படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தற்போது 50 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது. இதற்கு முந்தைய மம்முட்டியின் சில படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கே போராடி வந்த நிலையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.