'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த சில வருடங்களாகவே தியேட்டர்களில் வரிசையில் நின்று புக்கிங் செய்யும் நடைமுறை மாறி ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் முறை அறிமுகமானது, அந்தவகையில் தற்போது ஒரே ஒரு ஆன்லைன் புக்கிங் நிறுவனம் தான் தியேட்டர் டிக்கெட் புக்கிங்கில் ஒற்றை நபராக கோலோச்சி வருகிறது. இதற்காக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் வசூலிக்கும் புக்கிங் கட்டணம் கூடுதல் என்கிற விமர்சனம் இருந்தாலும் ரசிகர்கள் தாங்கள் விரும்பிய காட்சிகளுக்கு விரும்பிய இருக்கைகளை இருந்த இடத்திலிருந்து முன்பதிவு செய்ய முடிவதால் இந்த புக்கிங் முறை வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.
அதே சமயம் கேரளாவில் திருச்சூரில் கிரிஜா என்கிற தியேட்டரை நடத்தி வரும் டாக்டர் கிரிஜா என்பவர் இந்த ஆன்லைன் புக்கிங் முறைக்கு எதிரானவர். கடந்த எட்டு வருடங்களாக ஆன்லைன் புக்கிங் முறையை ஒதுக்கி விட்டு பேஸ்புக் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சோசியல் மீடியா மூலமாகவே ரசிகர்களுக்கு இலவச புக்கிங் முறையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத நபர்கள் தொடர்ந்து கிரிஜா மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 12 முறைக்கும் மேலாக அவரது சோசியல் மீடியா கணக்குகள் முடக்கப்பட்டு படங்களுக்கு புக்கிங் செய்வது தடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் இவர்கள் தியேட்டரில் தங்களது படத்தை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் கூட பெரிய அளவில் முன் வருவது இல்லை. இந்த சைபர் தாக்குதல் குறித்து பலமுறை போலீசாரிடம் முறையிட்டும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் டாக்டர் கிரிஜா, போலீசார் தங்களால் இந்த சைபர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஓப்பனாகவே கூறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்களான நடிகர் பிரித்விராஜ் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர்தான் தனது முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து ஓரளவு ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் கிரிஜா. ஆன்லைன் புக்கிங் செய்யும் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு தியேட்டர்கள் மூலம் பணம் சம்பாதிப்பதால் அதை தடுக்கும் விதமாக செயல்படும் டாக்டர் கிரிஜா மீது இதுபோன்ற மறைமுக சைபர் க்ரைம் தாக்குதல் நடத்துவதாகவே சொல்லப்படுகிறது.