தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தெலுங்கு திரையுலகில், போதை பொருள் பயன்பாடு குறித்து 2017ம் ஆண்டு கலால் துறை விசாரித்தது. இதில் நடிகர் ரவி தேஜா, நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், புரி ஜெகநாத் உட்பட பல திரை பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவரிடம் 90 பாக்கெட் 'கொக்கைன்' பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகைகள் சுரேகா வாணி, அஷூ ரெட்டி உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அஷூ ரெட்டி அடிக்கடி அவருக்கு போன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை மறுத்துள்ள அஷூ ரெட்டி, ‛என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டிக்கிறேன். உண்மை நிலையை விரைவில் விளக்குவேன். பொதுவெளியில் தனது தொலைபேசி எண்ணை வெளியிட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.