ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவர் மீதும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்காதது, கால்ஷீட் குளறுபடி உள்ளிட்ட பல புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் படங்களில் நடிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் உறுப்பினராக இல்லை என்பதால் பிரச்சினை கிளம்பிய அந்த சமயத்தில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்தார்.
அதேசமயம் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும்போது தான் இதன் மீது தீர்மானம் எடுக்கப்படும் என்பதால் அவரது விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இவரது விண்ணப்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள தன்னுடைய பிரச்னைகளை எல்லாம் சுமூகமாக முடித்துவிட்டு வந்த பின்னர்தான் இவருக்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறுப்பினர் படிவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட ஏழு பேருக்கு நடிகர் சங்க உறுப்பினராக க்ரீன் சிக்னல் அளித்துள்ளது நடிகர் சங்கம். இதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீநாத் பாஷி இனி தானாகவே பிரச்சனைக்குரிய தனது படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சென்று தங்களுக்குள்ளேயே சர்ச்சையை தீர்த்துக் கொண்டால் மட்டுமே அவரது திரையுலக பயணம் சீராக தொடரும் என்று தெரிகிறது.