ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
மலையாள நடிகர் திலீப் ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம், போலீஸ் விசாரணை என பல இக்கட்டான தருணங்களை எதிர்கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தனது சினிமா பயணத்தில் தொய்வு ஏற்பட்டு விடாமல் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாந்த்ரா மற்றும் வாய்ஸ் ஆப் சத்தியநாதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் திலீ ப் நடிகை வழக்கில் சிக்கி சிறை செல்வதற்கு முன்பாகவே நடிக்க ஒப்புக்கொண்ட இரண்டு சயின்ஸ் பிக்சன் படங்கள் தான் பறக்கும் பாப்பன் மற்றும் புரபசர் டிங்கன் ஆகியவை.
இந்த படங்களில் புரபசர் டிங்கன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டி இருக்கிறதாம். அதே சமயம் 3டியில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நீண்ட நாட்களாகவே தேங்கி நிற்பதால் தான் இந்த படம் முடிவடைய தாமதம் ஆகிறது என்றும் சொல்லப்படுகிறது.
அதற்கு காரணம் தற்போது நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக மாறி 3டியில் அவர் இயக்கி உள்ள பாரோஸ் படத்தின் தொழில்நுட்ப பணிகளையும் இந்த புரொபஷர் டிங்கன் படத்தில் பணியாற்றி வந்த குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர். அதனால் பாரோஸ் படத்தின் பணிகளை முடித்து விட்ட பின்னரே திலீப்பின் படத்தில் அவர்கள் பணியாற்ற துவங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் வரும் 2024ல் இந்த படம் வெளியாகிவிடும் என்றும் படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.