சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

மிகுந்த எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் குறிப்பாக படத்தின் முக்கிய நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒவ்வொரு முக்கிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அந்த மொழி திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சிக்கு இன்னும் வலு சேர்த்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்படி அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஜெயசூர்யாவை பாராட்டிய நடிகர் கார்த்தி, அவரை நடிகர் குஞ்சாக்கோ போபன் என நினைத்துக்கொண்டு மலையாள திரையுலகினர் அவரை செல்லமாக அழைக்கும் சாக்கோச்சா என்கிற பெயரை சொல்லி அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறினார்.
இதை அருகில் நின்று பார்த்த நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலரும் சற்று குழம்பித்தான் போனார்கள். நடிகர் ஜெயசூர்யாவுக்கு கூட அந்த குழப்பம் ஏற்பட்டதை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் குஞ்சாக்கோ போபன் கலந்து கொள்ளவும் இல்லை. ஜெயசூர்யாவைத்தான் கார்த்தி தவறுதலாக குஞ்சாக்கோ என குறிப்பிட்டதையும் அதை மேடையிலேயே கார்த்தியிடம் சொல்லி திருத்த முடியாமல் ஜெயராம் மற்றும் தொகுப்பாளினி இருவரும் சங்கடப்பட்டதையும் பார்க்க முடிந்தது.