ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சமீப வருடங்களில் தென்னிந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ஹைடெக்கான வில்லன் என்றால் கூப்பிடு ஜெகபதிபாபுவை என்று சொல்லும் அளவிற்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல எப்படி நடிகர் அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை மாற்றாமல் நடித்து வருகிறாரோ, அதேபோல ஜெகபதிபாபுவும் பெரும்பாலும் அதேபோன்று சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலுடன் தான் தனது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ள ஜெகபதிபாபு இந்த படத்திற்காக தனது முடியை டை அடித்து கருப்பாக மாற்றி நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திர தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எதுவும் தீர்மானிக்கப்பட்டு இருக்க வில்லை. அதேசமயம் சல்மான்கானும் நானும் இந்த படத்தில் மோதும் காட்சிகள் இருக்கின்றன. இதனால் சல்மான்கான் என்னிடம் வந்து என்னுடைய தலைமுடிக்கு டை அடித்து கருப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினார்.
அதற்கு காரணமாக அவர் சொல்லும்போது, நான் சண்டையிடும்போது எதிராளி என்னை விட வயதானவராக காட்சியளித்தார் என்றால் அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் உங்களை இன்னும் கொஞ்சம் இளமை தோற்றத்துடன் காட்டினால் அதில் நம்பகத்தன்மை இருக்கும் என்று கூறினார். இதில் எங்கேயும் அவர் என்னை வற்புறுத்தும் விதமாக, கட்டளை தொனியை வெளிப்படுத்தவே இல்லை. இதை ஒரு வேண்டுகோளாகவே அவர் என்னிடம் வைத்தார். அதனாலேயே நானும் ஒப்புக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஜெகபதிபாபு.