22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக தற்போதும் முன்னணி வரிசை இயக்குனராக பயணித்து வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரியதர்ஷினின் படங்கள் அனைத்துமே காமடியை பிரதானமாக கொண்டு உருவான படங்கள் தான். இன்னும் அவரது படங்களில் நடித்த காமெடி கதாபாத்திரங்கள் பல, ரசிகர்கள் மனதில் உயிர்ப்புடன் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கொரோனா பேப்பர்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். இந்த படம் நேற்று வெளியாகி உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து கிரைம் திரில்லர் பானியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் பிரியதர்ஷன்.
இது குறித்து அவர் கூறும்போது, “இனிவரும் காலங்களில் நான் காமெடி படங்களை இயக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். காரணம் முன்பு எனது படங்களில் பக்கபலமாக இருந்த நெடுமுடி வேணு, திலகன் இன்னொசென்ட், குதிரை வட்டம் பப்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இன்று என்னுடன் (உயிருடன்) இல்லை. இதனால் நான் கொஞ்சம் பாதுகாப்பு இல்லாதவன் போல தான் உணர்கிறேன். அதுமட்டுமல்ல இப்போதைய தலைமுறைக்கு இதுபோன்ற காமெடிகளை கடத்துவதில் சிரமம் இருக்கிறது. அதனால் தான் வெவ்வேறு ஜானர்களில் என்னுடைய படங்களை முயற்சித்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன்.