விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

வாரிசு ஹீரோக்கள் சினிமாவில் நிலைத்து நிற்கும் அளவுக்கு வாரிசு ஹீரோயின்கள் பெரும்பாலும் திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்பது இல்லை. அதிர்ஷ்டத்துடன் திறமையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சாதிக்க முடிகிறது. அந்த வகையில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான மாநாடு படத்தின் வெற்றி, இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் படத்தின் வெற்றி என தொடர் வெற்றி பெற்று ராசியான நடிகையாக மாறியுள்ளார் கல்யாணி.
இதுவரை தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து விட்ட கல்யாணி தற்போது முதன்முறையாக கன்னட துறையிலும் அடி எடுத்து வைக்கிறார். கன்னட சினிமாவின் பிரபல நடிகரான ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து அவரது பேரனும் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகனுமான யுவராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.




