'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. அதைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் என பல படங்களில் நடித்து தனது அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2011-ல் பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா, அதன்பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஜெனிலியாவும் ரித்தேஷ் தேஷ்முக்கும் பத்து வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி என்கிற திரைப்படம் வெளியானது. ஓடிடியில் வெளியானதால் வரவேற்பும் பெறமால் வந்த சுவடும் தெரியாமல் இந்த படம் சென்று விட்டது.
இதை தொடர்ந்து ரித்தேஷ் தேஷ்முக் முதன்முதலாக டைரக்ஷனில் இறங்கி இயக்கியுள்ள படம் 'வேத்'. இந்தபடத்திலும் ஜெனிலியாவே கதாநாயகியாக நடிக்க, ரித்தேஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கோலாப்பூர் பஞ்சகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு கணவன் மனைவி இருவரும் தரிசனம் செய்ய வந்தனர்.
அவர்கள் கோவிலுக்குள் சென்றிருந்த சமயத்தில் அந்த விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த செய்தியாளர்களை, பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவமரியாதையாக நடத்தியதுடன் அவர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரித்தேஷ் தேஷ்முக் நானும் ஜெனிலியாவும் இணைந்து கோயிலுக்குச் சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டது.. அதற்காகத்தான் இப்பொழுது தரிசனம் செய்ய வந்தோம்.. அதுமட்டுமல்ல.. அது சினிமாவைப் பற்றி பேசுவதற்கான இடமும் அல்ல.. நானும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு யாருக்கும் அழைப்பும் விடுக்கவில்லை. அதேசமயம் எனது குழுவினர் செய்தியாளர்களை தாக்கி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்