ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது பாலிவுட் வாய்ப்பு வந்தது. இருப்பினும் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கேயே செல் என்று கூறியது. தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.