அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

முன்னணி கன்னட நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் 'விக்ராந்த் ரோணா, கப்ஜா' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது 'லக்கிமேன்' படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் அனுதாபியான கிச்சா சுதீப், வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கிச்சா சுதீப் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் புண்யகோடி தத்து யோஜனா (பசு தத்தெடுப்புத் ) திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். "பசுக்களை பராமரிக்கவும், கோசாலைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு வாய்ப்பாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் கிச்சா சுதீப்பை நாங்கள் தூதராக இணைத்துள்ளோம். சுதீப் புண்யகோட்டி தத்து யோஜனாவை மாநிலம் முழுவதும் பரப்ப உதவுவார்” என்று துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.