ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

2026ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி வர இருக்கிறது. அதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பொதுவாக புதிய திரைப்பட வெளியீடுகளில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய வெளியீட்டு நாட்கள் முக்கியமானவை. அதிலும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. கோடை விடுமுறை ஆரம்பமாகும் என்பதே அதற்குக் காரணம்.
இந்த வருடத்திற்கான தமிழ்ப் புத்தாண்டிற்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்று இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை. விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு குறித்து தெரிந்த பிறகே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனம் இப்போதுதான் வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. ரிவைசிங் கமிட்டி வேலைகள் முடிந்த பிறகே பட அறிவிப்பு வெளியாகும்.
அதற்கடுத்து பெரிய படம் என்றால் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் தான். அவர்களும் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவை தவிர மேலும் சில படங்களின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஏப்ரல் மாதக் மத்தியில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி அந்த சமயம் தேர்தல் நடந்தால் இந்த வருட தமிழ்ப்புத்தாண்டுக்கு புதிய படங்கள் வருவது கடினம்தான்.