சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள் | டிசம்பர் மாதத்தில் புறநானூறு பட படப்பிடிப்பு? | சுந்தர்.சி இயக்கத்தில் ரவி தேஜா? | தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | 'விவாரியம்' ஹாலிவுட் படத்தின் ரீமேக் 'பிளாக்' ? | இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நாற்காலியின் 4வது கால் | லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க ஒளிப்பதிவாளர் தான் காரணம் : இனியா | பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு | விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை : தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா? |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கடந்த 2012ம் ஆண்டு தனது கல்லூரி காதலியான உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் உபாசனா. அதோடு பத்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், நாங்கள் விரும்பும் போது நான் தாயாக மாறுவதை தேர்ந்தெடுத்ததில் உற்சாகமாக இருக்கிறேன், பெருமைப்படுகிறேன்.
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற உள்ளோம். எங்கள் குழந்தைகளை நாங்களே கவனித்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன். இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் இந்த சமூகத்தில் இருந்தோ எங்கள் குடும்பத்தில் இருந்தோ யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. இது எங்களுடைய உறவு மற்றும் எங்களுடைய வாழ்க்கை என்பதால் நாங்களே அனைத்து விஷயங்களிலும் முடிவெடுத்தோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது ராம்சரண்- உபாசனா தம்பதியினர் அமெரிக்கா சென்று நிலையில் அவர்கள் குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்கும் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து உபாசனா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், எங்களுடைய குழந்தை இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையில் பிறக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.