'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு |

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா - ' ஹிருதயம்' படம் புகழ் இசையமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குஷி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனை 'குஷி' படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.