வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா | காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை |
மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ள இவர் பாலிவுட்டிலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எண்பதுகளின் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை லிசியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்தார்த் என்கிற மகனும் கல்யாணி என்கிற மகளும் இருக்கின்றனர். கல்யாணி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மகன் சித்தார்த் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு தந்தை இயக்கிய மரைக்கார் உள்ளிட்ட சில படங்களில் வி.எப்.எக்ஸ் பணிகளில் பணியாற்றி உள்ளார்.
பிரியதர்ஷனுக்கும் நடிகை லிசிக்கும் கடந்த 2015ல் கருத்து வேறுபாடு, ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின்னர் முறைப்படி விவாகரத்தும் பெற்று கடந்த ஏழு வருடங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருந்தாலும் தங்களது குழந்தைகளின் நலன் கருதி ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் ஒன்றாக கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் இவர்களது மகன் சித்தார்த்தின் திருமணம் கடந்த வெள்ளியன்று மாலை சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
மணமகள் மெலனி அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர். அங்கே வி.எப்.எக்ஸ் துறையில் பணியாற்றி வருகிறார். சித்தார்த்தும் அதே துறையில் பணியாற்றி வருவதால் இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று சொல்லப்படுகிறது. இந்த திருமணத்தில் பிரியதர்ஷனும் லிசியும் ஒன்றாக இணைந்து திருமண சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றினர். ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், இந்த நிகழ்விற்காக ஈகோ பார்க்காமல் ஒன்றிணைந்த பிரியதர்ஷன், லிசி இருவருக்கும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.