திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
கடந்த 2020ல் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடித்த சூபியும் சுஜாதையும் என்கிற படம் வெளியானது.. ஒரு இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய இளைஞனுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாகவும் மிக முக்கியமான வேடத்தில் அதிதி ராவின் காதலனாக சூபி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் தேவ் மோகன் தற்போது தெலுங்கு, தமிழில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அதிதி ராவ்வும் தேவ்மோகனும் விருது வழங்கும் விழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். “நீண்டநாளைக்கு பிறகு அதிதி ராவை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ளார் தேவ் மோகன்.