மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, "விஷ்ணுவர்தன் ஒரு மதிப்புமிகு நடிகர். பல மொழிகளில் நடித்துள்ள பல மொழி நடிகர். சாகச சிங்கம் என்று அழைக்கப்படுபவர் . விஷ்ணுவர்தன் நினைவிடம் சுற்றுலா தலமாக மாற வேண்டும்" என்றார்.