கவனம் ஈர்க்கும் 'தூமம்' டிரைய்லர் | பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா |
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சில படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டி நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இவர் இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
குஸ்தியை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ராஜஸ்தான் பகுதியில் தான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மராத்தி நடிகை சோனாலி , மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள சோனாலி, ‛‛மோகன்லால் போன்ற ஒரு லெஜன்ட் நடிகருடன் நடிப்பதுடன் எனது புதுவருடம் சூப்பராக ஆரம்பித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனாலி தற்போது மராத்தியில் நடித்துள்ள விக்டோரியா என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.