கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! |
மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த எவர்கிரீன் படங்களை வகைப்படுத்தினால் அதில் மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தில் லாரி டிரைவரான மோகன்லால் தனது வேட்டியை கழட்டி எதிரிகளை அட்டாக் பண்ணும் காட்சியும், தனது லாரியில் இருந்து ஸ்டைலாக குதித்து மாஸ் காட்டும் காட்சியும் ரொம்பவே பிரசித்தம். பிரபல இயக்குனர் பத்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இவர் எந்த அளவிற்கு இந்த படத்தின் மீது அபிமானம் கொண்டிருந்தார் என்றால் பின்னாளில், அதாவது சில வருடங்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்த போது கூட லாரியில் தான் மாப்பிள்ளை அழைப்பை நடத்தினார்.
இந்த ஸ்படிகத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார் பத்ரன். அதைத்தொடர்ந்து இந்த படம் வரும் தேதி பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மோகன்லாலின் வீட்டிற்கு சென்று அவருடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளார் இயக்குனர் பத்ரன். மலையாளத்தில் மோகன்லாலின் படம் முதன்முறையாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாக இருக்கிறது என்றால் அது இந்த ஸ்படிகம் தான்.