காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் நாளை ரிலீசாகிறது. படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், ''நான் இவ்வளவு ஆக்சன் காட்சிகளுடன் கூடிய படங்களில் நடித்ததில்லை. இது முற்றிலும் மாஸ் கமர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும். ஏஆர் முருகதாஸ் ரொம்ப கூல்லான இயக்குனர்.
இந்த படத்தில் அரசியல் மெசேஜ் இல்லை. அமரன் எதிர்பார்ப்பில் மக்கள் வருவார்கள் என்பது உண்மைதான். மதராஸி பார்த்தபிறகு அவர்களின் ரியாக்சன் பார்க்க வெயிட் பண்ணுறேன். நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக்-ல் நடிக்க ஆசை. காமெடி படங்களில் மட்டுமல்லாமல் எல்லா வகையான படங்களிலும் நடிக்க ஆசை. யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை; நான் என் இடத்தில் இருக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் பராசக்தி படம் 60களில் நடக்கும் கதையாக உருவாகிறது'' என்றார்.