தெலுங்கில் அறிமுகமாகும் விவேக் மற்றும் மெர்வின்! | யாரை சொல்கிறார் திரிஷா? சூசகமாக போட்ட பதிவு! | பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் | அமரன் படத்தின் வெற்றி விழா- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு! | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீ லீலா! | அஜித் குமார் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? நடிகர் ரமேஷ் கண்ணா வெளியிட்ட தகவல் | 'விஜய் 69' பட நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா? | தனக்கு பதிலாக 2 முன்னணி கதாநாயகிகளை சிபாரிசு செய்த சமந்தா | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் கைது | பஸ் விபத்தில் சிக்கிய காந்தாரா படக்குழு ; படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதா? |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று கட்டி வருகிறார். சுமார் 100 கோடி மதிப்பில் இந்த பங்களா உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் எழுந்தது. உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் இது குறித்து புகார் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛1994ம் ஆண்டின் பஞ்சாயத்து சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டட பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமான மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வரும்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது எதிர்ப்பு அதிகரித்தவுடன் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.