என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் லைகர். பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த படம் குத்துசசண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக மும்பை, சென்னை, சண்டிகர், ஐதராபாத், கேரளா என இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக டேபிளில் கால்களை தூக்கி வைத்து நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிருபர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் தன்னால் எப்படி சவுகரியமாக பேச முடியவில்லை என்பது பற்றி கூறினார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா, “ஏன் இப்படி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இப்போது பேசலாமே” என்று கூறியபடி தனது கால்களை அங்கிருந்த டீப்பாய் மீது தூக்கி வைத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்று வருகிறது.