தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சமீபத்தில் தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகன் நகில், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை சந்து மொண்டேத்தி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் இரண்டு முறை மாற்றப்பட்டு ஒருவழியாக கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாக நடைபெற்ற பிரஸ்மீட்டில் தனது படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செயல்பட்டதாக கூறி கண்கலங்கினார் நாயகன் நிகில். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது அப்போது தெரியவில்லை
இந்தநிலையில் படம் வெளியாகி வெற்றிபெற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, நிகில் போன்ற கதாநாயகர்களின் படங்களை ஊக்குவிக்க வேண்டும் அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
ஆனால் அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் பேசுவதை பின்னால் நின்று கவனித்த ஹீரோ நிகில், தான் சொன்ன அந்த தயாரிப்பாளரே அவர் தான் என்பதை உணர்த்தும் விதமாக நமட்டு சிரிப்பு சிரித்தார். இது பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு தெரியாது. ஆனால் இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நேரம் இது தயாரிப்பாளர் தில் ராஜுவின் கவனத்திற்கும் சென்று சேர்ந்திருக்கும் அந்த வகையில் இந்த வீடியோ இரண்டு பேருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.