அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

கடந்த ஒரு வருடமாகவே பான் இந்தியா என்கிற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டையும் சேர்த்து ஆட்டி வைத்து வருகிறது. ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதும், அதேபோல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெளியாவதும் என பல இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் பான் இந்தியா படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில் பான் இந்தியா என்பதையும் தாண்டி உலக அளவில் செல்லுங்கள் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் குஞ்சாக போபன்.
குஞ்சாக்கோ போபன் மலையாளத்தில் நடித்த அறிவிப்பு என்கிற படம் தற்போது லோகர்னோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லோகர்னோ வந்துள்ள குஞ்சாகோ போபன் இது குறித்து கூறும்போது, “எனது 25 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இனி பான் இந்தியா என்பதை விட 'கோ குளோபல்' என்று அனைவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் குஞ்சாகோ போகன்.